வடமாகாண ஆளுநரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு!

 வடமாகாண ஆளுநரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் இன்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்சினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகம் வவுனியா நகரசபை நூலக கட்டிடத்தில் திறந்துவைக்கப்பட்டது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆளுநரை தொடர்பு கொள்வதற்கு நீண்ட தூரம் பயணித்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 மாதத்தில் இரு தடவை ஆளுநர் விஐயம்

இந்நிலையில் மக்களின் சிரம நிலையை கருத்தில் கொண்டு குறித்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. வாரநாட்களில் மக்கள் தமது முறைப்பாடுகளை குறித்த அலுவலகத்தில் தெரிவிக்க முடியும்,

என்பதுடன் மாதத்தில் இரு தடவைகள் ஆளுநர் இங்கு விஐயம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.