குவைத்தில் இருந்து நாடுகடத்தப்பட இருக்கும்  62 இலங்கையர்கள்!

குவைத்தில் வீசா இன்றி தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 62 வீட்டுப் பணியாளர்கள் அங்குள்ள இலங்கை தூதரகத்தினால் தற்காலிக விமான அனுமதியுடன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் 62 பேரும் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 59 பேர் பெண்கள் என்றும் 3 பேர் ஆண்கள் எனவும்

மாதச் சம்பளத்துக்கு   பணிபுரியும் இலங்கையர்கள்

குவைத்தில் வீடுகளில் வேலைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீடுகளை விட்டு வெளியேறி, அங்கு தற்காலிக தங்கும் விடுதிகளில் தங்கி, மாதச் சம்பளத்துக்கு பல்வேறு பணியிடங்களில் பணிபுரியும் இலங்கையர்கள் குழுவே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என குவைத் நாட்டுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைக்கு வருவதற்காக குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தற்போது 2000க்கும் மேற்பட்ட இலங்கை வீட்டுப் பணியாளர்கள் பதிவு செய்துள்ளதாக குவைத் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மேலும் தெரிவித்தார்.