கனடாவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் கைது!

கனடாவில் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அந்தக் காட்சிகளை காணொளியாக்கிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கனடாவின் டொரன்டோ நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டொரன்டோவின் எக்லின்டன் அவென்யூ மற்றும் ஸ்டாண்டர்ட் வீதி ஆகியவற்றுக்கு இடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பாலியல் ரீதியாக துன்புறுத்தி ரகசிய கேமரா ஒன்றின் மூலம் அந்த காட்சிகளை பதிவு செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

போலீசார் நடத்திய விசாரணைகளின் மூலம் கேமரா மற்றும் கணினி என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 55 வயதான டின் ராபர்ட் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை, அனுமதி இன்றி அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வாறான தாக்குதல்களுக்கு இலக்கான வேறும் நபர்கள் இருக்கக் கூடும் என போலீசார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அவ்வாறானவர்கள் முன்வந்து போலீசாரிடம் முறைப்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .