தவறான முறையில் தேசிய கீதம் பாடிய  பாடகிக்கு சிக்கல்!

கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் நேற்று (30.07.2023) நான்காவது லங்கா ப்றீமியர் லீக் தொடரின் ஆரம்ப விழாவில் இலங்கையின் தேசிய கீதம் பொருள் மாற்றம் பெற்று , புதிய பாணியில், இசைக்கப்பட்டமைத் தொடர்பில், தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேற்படி அந்நிகழ்வில் எமது தேசிய கீதத்தை பாடகி உமார சிங்ஹசங் தவறான முறையில் சிங்கள மொழியில் இசைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

1978 ஆண்டு அரசியலமைப்பின் படி, தேசிய கீதத்தின் வரிகள் மற்றும் அதன் பின்னணி இசையினை மாற்றி இசைக்கப்பட்டமையானது, நாட்டின் கீர்த்தியையும், அரசியலமைப்பையும் மீறும் செயற்பாடு என சட்ட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.    

Previous articleஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 365 நாட்கள் உள்ளன
Next articleஇன்றைய ராசிபலன்கள் 01.08.2023