இன்றைய ராசிபலன்கள் 02.08.2023

மேஷ ராசி அன்பர்களே!

வார முற்பகுதியில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நல னில் கவனம் செலுத்தவும். பணவரவுக்குக் குறைவிருக்காது. எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டா லும் போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். சகோதர வகையில் சிற்சில சங்கடங் கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. வழக்குகளில் பொறுமையைக் கடைப் பிடிப்பது அவசியம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும்.

ரிஷப ராசி அன்பர்களே!

எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. வார முற் பகுதியில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்ய வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ஆனால், பற்று வரவு சுமுகமாக நடை பெறும். கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளை இந்த வாரம் தவிர்ப்பது நல்லது.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடைபெறும். பிறந்த வீட்டில் இருந்து எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். புகுந்தவீட்டு உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

மிதுன ராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும். உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு திடீர் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருக்கும் தோழிகள் உதவிகரமாக இருப்பார்கள்.

கடக ராசி அன்பர்களே!

பணவரவு ஓரளவு திருப்தி தரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற் கில்லை. விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு பாராட்டுவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சக ஊழியர்கள் தங்கள் பணிகள் தொடர்பாக உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. சரக்கு கொள்முதலுக்காக தொலைதூரப் பயணங்கள் மேற்கொள் வதைத் தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். புகுந்தவீட்டு உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த கசப்பு உணர்வுகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

தேவையான அளவுக்கு பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி செலவுகள் ஏற்படும். சிலருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவார்கள்.
வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். சக வியாபாரிகளுடன் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரித்தாலும் போதிய பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். கணவரின் முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்து அவரை உற்சாகப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி ராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும் என்பதால் சிறிது கடன் வாங்கவும் நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இளைய சகோதரர்களால் உதவி உண்டு. பிள்ளைகளால் தேவையற்ற பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும். தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.
வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு பதவிஉயர்வு அல்லது ஊதியஉயர்வு கிடைப்பதற்கும் சாத்தியமுண்டு. இதுவரை கண்டிப்பாக இருந்த அதிகாரி கனிவுடன் நடந்துகொள்வார்.வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கச் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். உழைப்புக் கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வீட்டில் மகிழ்ச்சி யான சூழ்நிலையே காணப்படும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

துலா ராசி அன்பர்களே!

வருமானம் திருப்தி தருவதாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். இளைய சகோதரர்களால் ஆதாயம் ஏற்பட்டாலும், சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் பொறுமை அவசியம். தந்தையுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், சற்று பொறுமையாக இருப்பது நல்லது. அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இழுபறியான நிலையே காணப்படும்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசர ணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும். சலுகைகளும் கிடைக்கக்கூடும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். வாடிக் கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிக ராசி அன்பர்களே!

பணவரவுக்குக் குறைவில்லை. அதேசமயம் சில தேவையற்ற செலவு களும் ஏற்படக்கூடும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்குவதைத் தவிர்த்து விடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆறுத லும் தருவதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். பேச்சினால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமை அவசியம்.அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்பு பவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளால் சற்று சிரமப்படவேண்டி இருக்கும். அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.

தனுசு ராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் இருக்காது. திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை அவசியம். உறவினர்க ளால் குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது.
வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். ஆனாலும், சற்று இறுக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். மற்றவர்களுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் கலகலப்பும் உற்சாகமுமான சூழ்நிலை காணப்படும்.

மகர ராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருந்தாலும் செலவுகள் அதிகரிப் பதால் சிலருக்குக் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான சூழ்நிலை யே காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.
அலுவலகத்தில் உங்களின் ஆலோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். அதன் காரணமாக சில சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் நீங்கும்.
வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. வார முற்பகுதியில் வீட்டில் பராமரிப்புப் பணிகள் ஏற்படும் என்பதால் உடல் அசதி உண்டாகும்.

கும்ப ராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினருடன் கலகலப்பாகப் பேசியும் விளையாடியும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்கள் இணக்கமாக இருப்பார்கள். பணியாளர்கள் மிகுந்த ஊக்கத்துடன் செயல்படுவார்கள்.

மீன ராசி அன்பர்களே!

பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். அதே நேரம் செலவுகளும் குறைவாகவே இருக்கும். உறவினர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசாங் கக் காரியங்கள் முடிவதில் இழுபறியான நிலையே காணப்படும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச் சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது.அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும். அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். பணியின் காரணமாகப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது. வாடிக்கையாளர்களால் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் இருக்காது. புகுந்த வீட்டு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். என்றாலும் சாதுர்யமாகச் சமாளித்துவிடு வீர்கள்.

Previous articleமுச்சக்கர வண்டிக் கட்டணங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
Next articleகடன் பிரச்சனை தீர பெருமாள் வழிபாடு