மனைவி வெளிநாடு சென்ற சோகத்தில் விபரீத முடிவெடுத்த கணவன்!

இலங்கையில் உள்ள பகுதியொன்றில் மனைவி வெளிநாடு சென்ற துக்கத்தை தாங்க முடியாமல் கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கிரியெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த (01-08-2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், குறித்த சம்பவத்தில் சிறிசமன்புர கரந்தனையைச் சேர்ந்த 37 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வறுமையிலும் மனைவி வெளிநாடு செல்வதை அவரால் தாங்க முடியாத காரணத்தில் குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியெல்ல பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.

Previous articleசுகாதார சேவை கட்டமைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
Next articleமுடிவுக்கு வரும் கனடா பிரதமரின் 18 வருட திருமண வாழ்க்கை