விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட யாழ் பல்கலை மாணவி!

யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த மாணவி

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவியே இவ் விபரீத முடிவை எடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழத்திற்கு அண்மையில் உள்ள விடுதி ஒன்றிலேயே குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.

மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇன்றைய நாணய மாற்று வீதத்தின் படி
Next article82 வயதான பாட்டி பாலியல் துஷ்பிரயோகம்!