இலங்கையில் முக்கிய பதவி வெற்றிடங்கள்

 இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கான நியமனம் குறித்த அரசியலமைப்பு சபையின் தீர்மானம் மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் (22.08.2023)ஆம் திகதி மீண்டும் அரசியலமைப்பு சபை கூடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள இரண்டு உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் வெற்றிட உறுப்பினர்களை நியமிப்பதற்கு நேற்று (02.08.2023) அரசியலமைப்பு சபை கூடியது.

இவ்விடயம் குறித்து எவ்வித பரிந்துரைகளும் நேற்று முன்வைக்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.  

Previous articleவிபத்தில் சிக்கிக் கொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர்
Next articleயாழில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிசார்!