காதல் முறிவால் விபரீத முடிவெடுத்த பாடசாலை மாணவி!

கல்கமுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ் விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் முறிவு காரணமாக விரக்தியில் சிறுமி இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டை விட்டு தப்பியோடிய மாணவி

உஸ்கல சியம்பலங்காமுவ கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி சில வாரங்களுக்கு முன்னர் மாணவன் ஒருவருடன் வீட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.

சம்பவத்திற்கு தொடர்புடைய அம் மாணவனை பொலிஸார் கைது செய்து சிறுவர் சீர்த்திருந்த கல்லூரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தின் பின்னர் வீடு திரும்பிய சிறுமி விபரீத முடிவை எடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Previous articleஇன்றைய ராசிபலன்கள் 05.08.2023
Next articleகாதலியின் பிறந்தநாளில் காதலன் செய்த மோசமான செயல்!