யாழ் நிலா ரயில் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழ்நிலா’ என்ற புதிய ரயில் சேவையில் ஈடுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த ரயில் சேவை காங்கேசன்துறைக்கும் கல்கிஸ்ஸவிற்கும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்நிலா ரயில் நேற்று (04.08.2023) இரவு முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.

மேலும் இம்மாதம் 18ஆம் திகதிக்கு பின்னர் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் போக்குவரத்து வசதியினை மேம்படுத்துவதற்காக இவ் விரைவு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து யாழ்நிலா ரயில் தினமும் சேவையில் இயக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

Previous articleகாதலியின் பிறந்தநாளில் காதலன் செய்த மோசமான செயல்!
Next articleமன்னாரில் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!