சிறைச்சாலை கண்காணிப்பாளர் மீது தாக்குதல்!

காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர்  பயணித்த பஸ்ஸில் ஏறி, அவர் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த குழுவைச் சேர்ந்த ஒருவரை பயணிகள் பிடித்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக வெலிகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.  

தாக்குதலுக்கு உள்ளான கண்காணிப்பாளர்  மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

சிறைச்சாலை கண்காணிப்பாளர் தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது சுமார் 6 பேர் கொண்ட குழுவொன்று பஸ்ஸில் ஏறி அவரைத்   தாக்கியுள்ளனர்.

இதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், குறித்த குழுவினர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த நிலையில்  பஸ்ஸிலிருந்து தப்பியோடியுள்ளனர். இவர்களில் ஒருவரே பயணிகனால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Previous articleகடும் வெயிலால் முல்லைத்தீவில் இலட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு!
Next articleயாழ்நகர் பகுதியில் பொது மக்களுக்குஇடையூறு ஏற்ப்படும் வகையில் நடந்து கொண்ட நால்வர் கைது!