தென்னையில் தேங்காய் பறிக்க ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

கிளிநாச்சி முழங்காவில் பகுதியில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய நபர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

அன்புபுரம் முழங்காவில் பகுதியைச் சேர்ந்த -கருணாகரன் ரூபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி முழங்காவில் கிருஷ்ணன் கோவில் வீதியில் குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை  (06)  இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

குறித்த நபர் தேங்காய் பறிக்கும் தொழிலை மேற்கொண்டு வரும் ஒரு கூலித்தொழிலாளியான இவர் குறித்த பகுதியில் உள்ள ஒருவரின் காணியில் தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய போது  தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் . 

Previous articleயாழ்நகர் பகுதியில் பொது மக்களுக்குஇடையூறு ஏற்ப்படும் வகையில் நடந்து கொண்ட நால்வர் கைது!
Next articleபாடசாலை தவணை பரீட்சைகள் தொடர்பில் புதிய முடிவு