வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்க புதிய வழிமுறை!

வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கை மக்களுக்கு வாக்களிக்கும் முறைமை ஒன்றை தயாரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், நாடாளுமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய பொறிமுறையொன்றைத் தயாரிக்கத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக வாக்களிப்பை பதிவு செய்யும் முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் இதன் ஊடாக வாக்களிப்பில் பதிவு செய்ய முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் கலந்தாலோசித்து இதற்கான அமைப்பை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ Namal Rajapaksa தெரிவித்துள்ளார்.

Previous articleயாழில் ஆசிரியர் தாக்குதலால் மாணவனின் முக நரம்பு பாதிப்பு!
Next articleவெளிநாடு செல்ல முடியாமல் தவிக்கும் இலங்கை இளைஞர்கள்