கொழும்பில் ஜஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தின்பேரில் ஆட்டுப்பட்டிதெரு பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்துக்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருகொடவத்தை போக்குவரத்து சமிக்ஞை விளக்குக்கு  அருகில் நின்று கொண்டிருந்த போதே  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வைத்தியரிடம் பரிசோதனைக்காக ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் 11.08.2023
Next articleகிளிநொச்சியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இருவருக்கு கடூழிய சிறைத் தண்டனை!