யாழில் வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழில் 52 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்றைய தினம் திருமணச் சடங்கிற்கு சென்ற வேளை குடும்பஸ்தர் தனிமையாக வீட்டில் இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நிலையில் காணப்பட்ட குடும்பஸ்தர்

உறவினரொருவர் இவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அவதானித்த உறவினர் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் இதனால் அவ் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் கணபதிப்பிள்ளை மகேந்திரன் என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Previous articleஅம்பாறையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!
Next articleசெந்தில் தொண்டமானுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!