மனைவியை வீடிற்குள் பூட்டி விட்டு தீ வைத்த கணவன்

களுத்துறையில் மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு கணவன் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

களுத்துறை, கமகொட, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் சில காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம் பெற்ற கொடூரம்

சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை மது போதையில் வந்து ரப்பர் மெத்தை, தலையணைகள் மற்றும் துணிகளை வீட்டில் வைத்த பின்பு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு விசாரணைகளில் கணவன் இச் செயலை செய்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Previous articleஇரண்டு முறை தோல்வி தந்தையும் மகனும் தற்கொலை!
Next articleஉயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் பரவும் தவறான தகவல்