இத்தாலியில் இலங்கையரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற இலங்கையர் கைது!

இத்தாலியில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த இலங்கையர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில், 37 வயதுடைய இலங்கையர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வழக்கம்போல் காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண்ணை சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, 25 வயதுடைய பெண்ணை சந்தேக நபர், பூங்காவிற்கு இழுத்துச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சிலர் வந்ததை தொடர்ந்து சந்தேகநபர் தப்பிச் சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

Previous articleஉலக்கையால் உயிரிழந்த பாடசாலை மாணவி!
Next articleகனடாவில் தொழிலதிபர் மீது 28 பெண்கள் முறைப்பாடு