பொலிசாருக்கு அழைப்பு விடுத்த தேரேர்

 கண்டி – ஹசலக்க பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றினுள் முகமூடி அணிந்து நுழைந்த மூவர் தேரருக்கு கத்தியை காட்டி மிரட்டி விகாரையில் இருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விகாரையில் வசித்து வந்த தேரர் ஒருவர் 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று விகாரைக்கு சென்றதுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.