கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி காலை 8 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, 19 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 02 மணி வரை கொழும்பு, தெஹிவளை கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளுக்கும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரிய பிரதேசங்களுக்கும், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களுக்கும் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் கர்ப்பப்பை வெடித்ததில் பெண் உயிரிழப்பு!
Next articleபோதையில் பாடசாலைக்கு சென்ற மாணவி