ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் விசேட சந்திப்பு !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசேட சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கோரிக்கைக்கு அமைய நடைபெறும் இந்த சந்திப்பில், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Previous articleவீடொன்றில் சடலமாக மீட்க்கப்பட்ட 16 வயதுடைய பாடசாலை மாணவி
Next articleகூட்டு பாலியல் வன்கொடுமையால் சிறுமி உயிரிழப்பு!