வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இருவர் கைது!

21 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைதாகினர்.

குறித்த சிகரெட் தொகை டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து 21,400 சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

Previous articleகோதுமை மாவின் விலையை அதிகரிக்க அழுத்தம்!
Next articleவறட்சியான காலநிலையால் 35,653 விவசாயிகள் பாதிப்பு!