16 வயது மாணவி சடலமாக மீட்பு

சூரியாரா, செவனகல, இந்துனில்புர பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவியை செவனகல வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

சிறுவயதிலேயே தந்தை இழந்த குறித்த மாணவி தாயாருக்கு நிலையான வருமானம் இல்லாத நிலையில் நெலும்சிறிகமவில் உள்ள சிறிய வீடொன்றில் வசித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் செவனகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடும்பத்தில் நிலவும் கடும் நிதி நெருக்கடி காரணமாக குறித்த மாணவி கடும் விரக்தியில் வாழ்ந்து வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனியார் வகுப்பு ஆசிரியையின் விருந்து வைபவமொன்றில் பங்கேற்க முடியாமல் மாணவி மிகுந்த ஏமாற்றத்தில் இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleநோர்வேயில் வரலாற்று சாதனை படைத்த இலங்கையர்
Next articleயாழில் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு தண்ணீர் கொடுக்க சாதி என்ன என கேட்ட பெண்!