தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு

பொருளாதார போக்குகள் காலநிலை மாற்றம் உள்ளிட்ட சகல காரணிகள் குறித்தும் கவனம் செலுத்தி இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு ஒன்றை நடத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மீளாய்வுக்காக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையிலான குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளை வகுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பூஸா கடற்படை தொண்டர் படையின் உயர்மட்ட கடற்படை பயிற்சி நிலையத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Previous articleவாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது!
Next articleஇன்றைய ராசிபலன்20.08.2023