இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்தில் பலி !

அனுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியையான 36 வயதுடைய பெண்ணும் அவரது 8 வயது மகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.இவர்கள் ராஜாங்கனை, தஹதர காலனி பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் குறித்த இருவரும் பயணித்த ஸ்கூட்டருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் விபத்துக்குள்ளான தாய் மற்றும் மகளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பர் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Previous articleவிரைவில் தரையிறங்கவுள்ள சந்திராயன்-3 விண்கலம்!
Next articleயாழில் குப்பையில் வீசப்பட்ட சுமார் 15 லட்சம் பெறுமதியான ஆபரணங்களை உரியவர்களிடம் ஒப்படைத்த சுகாதாரத் தொழிலாளி !