நிலத்தடி நீரை பயன்படுத்துவோருக்கான அறிவுறுத்தல் !

கடும் வறட்சியான காலநிலை காரணமாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துவோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்வழங்கல்  சபை தெரிவித்துள்ளது.

நீர்வழங்கல்  சபையின்  பிரதி முகாமையாளர் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) ஆர். எம். எஸ். ரத்னாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில்,   நிலத்தடி நீரின் சுவை, மணம் அல்லது நிறத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், நீர் மாதிரிகளைப் பரிசோதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் உப்புத்தன்மையில் மாற்றம் ஏற்படக் கூடும் என்பதால் மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிலத்தடி நீரில் அவ்வாறான மாற்றம் ஏற்பட்டால் கொழும்பு, புத்தளம், அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பரிசோதனை கூடங்களில் நீர் மாதிரிகளை மக்கள் பரிசோதிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Previous articleவீழ்ச்சியடைந்த கச்சாய் எண்ணெய்!
Next articleவரட்சியான காலநிலையால் உயிரிழக்கும் விலங்குகள்