நல்லூர் மகோற்சவ பெருவிழா தொடர்பில் பொலிசார் பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

  வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவம் நேற்றையதினம் (21) ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் நல்லூர் ஆலயவளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென யாழ்ப்பாண பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜரூப் தெரிவித்தார் . இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

விசேடநடைமுறைகள் – வீதி ஒழுங்குகள்

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் நேற்று முதல் ஆரம்பமாகி எதிர்வரும் மாதம் வரை இடம்பெறவுள்ளது.

இல காலபகுதியில் நல்லூர் ஆலய வளாகத்தில் பொலிஸார் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபையினரால் விசேடநடைமுறைகள் வீதி ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் நல்லூரானை தரிசிக்க வரும் அடியவர்கள் பொலிஸாரின் கடமைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் .

அத்தோடு குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்காக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டுதலின் கீழ் பொலிஸ் சிவில் உடையிலும் சீருடையிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் .

எனினும் ஆயலத்திற்கு வருகைதரும் பொதுமக்கள் தங்களுடைய உடமைகளை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் வீடுகளை நன்றாக பூட்டி தங்களுடைய வீடுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி ஆலயத்திற்கு வந்து செல்ல வேண்டும் என தெரிவித்தார்.