யாழில் புடவைக்கடை முதலாளியின் மகன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த போது பலி!!

யாழில் ராசி புடவைக்கடை முதலாளியின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதி, கொட்டடி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

போதை ஊசி செலுத்தியதால் அவர் உயிரிழந்தாரா என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

30 வயதான எஸ்.மிதுன்ராஜ் என்ற இளைஞனே, அறை கட்டிலில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் நகரிலுள்ள ராசி புடவைக்கடை முதலாளியின் மகன். அவர் போதைப்பாவனையுடையவர் என தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு வீட்டுக்கு வந்து, சாப்பிட்ட பின்னர் படுக்கைக்கு சென்றார். சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

அவர் வழக்கமாக போதைப்பாவனையின் பின்னரே வீட்டுக்கு வருவதும் தெரிய வந்துள்ளது.

Previous articleநாட்டு மக்களுக்கு நன்றி கூறிய கனேடிய பிரதமர்
Next articleஇன்றைய ராசிபலன்22.08.2023