சிக்கிய 5 பக்கக் கடிதம்; கை குழந்தையுடன் இளம் தாய் விபரீத முடிவு

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டம் பகுதியில் உள்ள பாரிய குளத்தில் இருந்து தாய் மாற்றும் ஒருவயது குழந்தை ஆகியோரின் சடலங்கள் புதன்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை, லோகி தோட்டத்தைச் சேர்ந்த மகாமணி தயானி என்ற 26 வயதான இளம் தாயே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் 5 பக்கக் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளார் எனவும், அதில் தன்னையும், தனது குழந்தையையும் கணவரும், அவரின் குடும்பத்தாரும் துன்புறுத்திவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

26வயதுடைய தாய் தயானி மற்றும் ஒரு வயது மகள் பிரதிக்ஸா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில் தாயும் , குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஉயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு !
Next articleஇன்றைய ராசிபலன்24.08.2023