தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேட் வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 23 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (25) காலை 9 மணியளவிலேயே பிரதேசவாசிகள் சம்பவத்தை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

சடலமானது சம்பவம் நிகழ்ந்த வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் சட்டத்தரணிகள்
Next articleகோழி இறைச்சியின் விலை குறைவடையும் வாய்ப்பு!