நீர்த்தொட்டியில் விழுந்த பெண் குழந்தை உயிரிழப்பு!

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது.

நேற்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மாலை வீட்டு முற்றத்தில் குறித்த சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் அவரைத்தேடியுள்ளனர்.

இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.

உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே குறித்த குழந்தை மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராஜா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே மரணமடைந்தது.

சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleசர்வமத குருமார்கள் மீது கொலை அச்சுறுத்தல்
Next articleமது போதையில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழர்கள் கைது!