ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!

பதுளை – மஹியங்கனை வீதியில் ஆசிரியர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டது.

எனினும் தற்போது சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தங்களுக்கு ஆயிரத்து 450 ரூபா மாத்திரமே வழங்கப்படுவதாக தெரிவித்து அவ் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபெற்றவளுக்காக வேலையை விட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்
Next articleமின்சாரசபை விடுத்துள்ள எச்சரிக்கை!