8 லட்சம் பேருக்கான கொடுப்பனவு நாளை

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள  15 லட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை  திங்கள்கிழமை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தகவல்களை விரைவாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், மீதமுள்ள பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பிலான ஆராய்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது நிறைவடைந்தவுடன் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் பயனாளிகள் வங்கிகளில் பணத்தினை பெற முடியும்.

மேலும் தவறான தகவல் அளித்து சலுகை பெற்றவர்கள் இருப்பின், பெறப்பட்ட பணத்தை மீட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க நலன்புரி நன்மைகள் சபை செயல்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தகுதியுடைவர்களுக்கு கட்டாயம் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleபணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது!
Next articleஇன்றைய ராசிபலன்28.08.2023