அபாயாவிற்கு தடை விதிப்பு!

முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயாவிற்கு பிரான்ஸ் நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல விடயங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்து பாடசாலை மாணவர்கள் அபாயா ஆடைகளை அணிவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், பாடசாலைகளுக்கு தொடர் விசேட வழிகாட்டுதல்களை வழங்க அந்நாட்டு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பிரான்ஸ் அரசாங்கம் 2004 ஆம் ஆண்டு பாடசாலைகளில் தலையை மூடும் வகையில் ஆடைகளை அணிய தடைசெய்ததுடன், 2010 ஆம் ஆண்டில் முழுமையாக முகத்தை மூடுவதைத் தடைசெய்ய நடவடிக்கை எடுத்தது என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Previous articleசிகிரியாவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!
Next articleநீச்சல் தடாகத்தில் மூழ்கி பல்கலை மாணவர் பலி