பாதசாரிக் கடவையில் கடந்த நபர் உயிரிழப்பு!

தலவாக்கலை பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த நபர் ஒருவர் லொறி மோதியில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை – நுவரெலியா வீதியில் நானுஓயா ரதெல்ல பிரதேசத்தில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் திங்கட்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர்

ரதெல்ல, சர்செட் தோட்டத்தின் லாண்டேல் பிரிவில் வசித்து வந்த ராஜு கிருஷ்ணகுமார் (33) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

வேலைக்குச் செல்வதற்காக காலையில் அவசர, அவசரமாக பாதசாரி கடவையில் கடந்த இவரை அதிவேகமாக வந்த லொறி மோதித்தள்ளியுள்ளது.

படுகாயமடைந்த நிலையில் அதே லொறியில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்த நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். 

Previous articleகாலவரயரையின்றி மூடப்படும் பேருந்து தரிப்பிடம்
Next articleயாழில் சுற்றுலா சென்ற மாணவர்களை விகாரையில் தங்க வைத்த அவலம்