“லட்சியம் நிச்சயம் வெல்லும் ” தடைகளை உடைத்தெறிந்த இலங்கை அசானி !

இலங்கை சிறுமி அசானி தடைகள் தாண்டி மீண்டும் சரிகமப மேடையில் பாடியுள்ளார்.

ஆட்டோகிராப் திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே ” என்ற பாடலை பாடும் போது தடுமாற்றத்தில் அசானி பாதியில் நிறுத்தி விடுகின்றார்.

இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், தடைகளை கடந்து அனைவரது ஆதரவுகளுடனும் அசானி மீண்டும் பாடினார்.

இது குறித்த காணொளி வைரலாகி அசானிக்கு ஆதரவு குவிந்து வருகின்றது.

இதேவேளை, அவர் போட்டியாளராக நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வில்லை என்பதால் எதிர்வரும் வாரங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வரா என்பது குறித்த தகவல் கிடைக்கப்பெற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleவடிவேலுவின் தம்பி மரணம் சோகத்தில் குடும்பத்தினர் !
Next articleகோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் இலங்கை பிரபலம் ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் !