பெரும் சோகம்: பரிதாபமாக உயிரிழந்த 20 வயது இளைஞன்!

நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் காட்டுக்கு விறகு தேடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்றைய தினம் (27-08-2023) தலவாக்கலை, கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் எல்ஜின் ஓயாவில் இடம்பெற்றுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் கீழ் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய பிரபாகரன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த தோட்டத்தில் உள்ள மேலும் இரண்டு இளைஞர்களுடன் இணைந்து இவர் விறகு தேடச்சென்றுள்ளார்.

அவ்வேளையில் எல்ஜின் ஓயாவில் சிலர் குளித்துக்கொண்டிருந்த போது குறித்த இளைஞனும் ஓயாவில் இறங்கியுள்ளார்.

இதன்போதே நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து தேடி மீட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் இலங்கை பிரபலம் ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் !
Next articleயாழிலிருந்து வவுனியா சென்ற பேருந்துக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு