வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் இளைஞர் ஒருவரின் வியக்கத்தகு கண்டுபிடிப்பு !

வவுனியாவில் உள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் அனுஷாந்த் என்பவர் புதுவித பாதுகாப்பு கருவி ஒன்றை கண்டுபிடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

வவுனியாவில் உள்ள பிரபல தொழிற்சாலை நிறுவனத்தில் சுமார் 5000 தொழிலாளர்கள் உட்பட பணியாற்றி வருகின்றனர்.

இதில் அதிகளவானோர் பெண்களே ஆவார்கள் இவர்கள் ஆடை தைத்தல் துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர்.

இதன்போது ஆடை தைத்தல் வேலையை மேற்கொள்வதற்கு பயன்டுத்தபடும் இயந்திரங்களில் ஆடைக்கு பொத்தான் அடிக்கும் மிசினில் பெண்கள் வேலை செய்யும் போது மிகுந்த கவனத்துடன் வேலை செய்து வந்துள்ளனர், எனினும் அம்மிசினில் தைக்கும்போது சிறிது கவனம் சிதறினால் பாரிய விரல் சேதத்தை விளைவிக்கும்.

இதனால் அத்தொழிற்சாலையில் பணியாற்றும் அனுஷாந்த் என்பவரின் சொந்த முயற்சியால் ஆடையின் பொத்தான் அடிக்கும் மிசினில் வேலை செய்யும் பெண்களின் பாதுகப்பிற்காக புதுவித பாதுகாப்பு கருவி ஒன்றை கண்டுபிடித்து அனைவரின் பாராட்டினை பெற்றுள்ளார்.