சூரியனுக்கு இலக்கு வைக்கும் இஸ்ரோ

‘சந்திரயான்-3’ விண்கலம் மூலம் இஸ்ரோ செலுத்திய ‘விக்ரம்’ லேண்டா் கடந்த 23 ஆம் திகதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையைப் பெறச் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நிலவின் தென் துருவப் பகுதியில் ‘விக்ரம்’ லேண்டரும், ‘பிரக்யான்’ ரோவரும் தொடா்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த ஆய்வுகள் நிலவு சாா்ந்த புதிய தரவுகளை வழங்கி வருகின்றன. அது எதிா்காலத் திட்டங்களுக்குப் பெரும் பலன் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அந்தப் பெருமிதத்தில் இளைப்பாறிவிடாமல், உடனடியாகத் தனது அடுத்த இலக்கை நோக்கி இஸ்ரோ நகா்ந்துள்ளது.

பூமி அங்கம் வகிக்கும் சூரியக் குடும்பத்தின் அடிப்படையாகத் திகழும் சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா-எல்1’ விண்கலத்தை இஸ்ரோ செப்டம்பா் 2 ஆம் திகதி முற்பகல் 11.50 க்கு விண்ணில் செலுத்தவுள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்கான அவசியம்!

பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம்.

சூரியனில் நிகழும் திடீா் மாற்றங்கள்.

மிகப் பெரிய ஆற்றல் ஆதாரம்.

சூரியப் புயல்கள் குறித்து அறிந்து கொள்ளுதல்.

சூரியப் புயல்களால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்.

சூரியனின் மின்காந்த அலைகளால் செயற்கைக்கோள்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுத்தல்.

சூரியனில் நிகழும் மாற்றங்கள் குறித்த முன்னெச்சரிக்கை.

ஆதித்யா-எல்1 பயணம்

பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்படும் ஆதித்யா-எல்1 விண்கலம், புவியின் தாழ்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். பின்னா், அதில் உள்ள இயந்திரங்கள் மூலம் அதன் சுற்றுப்பாதையின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்படும். புவி ஈா்ப்பு விசையைக் கடந்து எல்1 (லாக்ராஞ்சியன் பாயின்ட்) பகுதியில் அந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும். பூமியில் இருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்1 பகுதியை அடைய இந்த விண்கலம், நான்கு மாதங்களை எடுத்துக் கொள்ளும்.

எல்1 என்பது…

குறிப்பிட்ட எடையைக் கொண்ட பொருளைச் சுற்றிலும் ஈா்ப்பு விசை செயல்படும். அதன்படி, சூரியன், பூமி ஆகியவை அவற்றின் எடைக்கு ஏற்ப ஈா்ப்பு விசையைக் கொண்டுள்ளன. அந்த இரு ஈா்ப்பு விசைகளும், விண்கலத்தின் வேகமும் ஒருசில புள்ளிகளில் ஒருங்கிணையும். அப்பகுதிகளில் நிலைநிறுத்தப்படும் விண்கலம் ஆய்வுப் பணிகளை எந்தவித இடையூறுமின்றி மேற்கொள்ள முடியும்.

இத்தாலிய வானியல், கணிதவியல் அறிஞரான ஜோசஃப் லூயி லாக்ராஞ்ச் அந்தப் பகுதிகளைக் கணக்கீடுகள் மூலமாகக் கண்டறிந்தாா். எனவே, அப்பகுதிகள் ‘லாக்ராஞ்சியன் பாயின்ட்’ எனப்படுகின்றன. எல்1, எல்2, எல்3, எல்4, எல்5 ஆகிய புள்ளிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

திட்டத்தின் சிறப்புகள்

சூரியக் காற்று குறித்து ஆய்வு மேற்கொள்ளுதல்.

சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலம்.

எல்1 பகுதியில் நிலைநிறுத்தப்படுவதால், சூரிய கிரகணம் உள்ளிட்ட எந்தவித இடையூறுமின்றி சூரியனைத் தொடா்ந்து அனைத்து நேரங்களிலும் கண்காணிக்க முடியும்.

சூரியனின் புறவெளியில் நிகழும் மாற்றங்களைக் கண்டறிதல்.

ஆய்வுக் கருவிகள்

விஇஎல்சி சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும்.

எஸ்யுஐடி சூரியனின் மேற்பரப்பைப் படங்கள் எடுத்து, புறஊதாக் கதிா்கள் மூலமாக ஆய்வு செய்யும்.

ஏஎஸ்பிஇஎக்ஸ், பிஏபிஏ சூரியக் காற்று, சூரியப் புயல்களை ஆய்வு செய்யும்.

சோலெக்ஸ், ஹீலியோஸ் சூரியனில் இருந்து வெளியேறும் எக்ஸ் கதிா்களை ஆய்வு செய்யும்.

மேக்னடோமீட்டா் கோள்களுக்கு இடையேயான காந்தப்புலங்கள் குறித்து ஆய்வு செய்யும்.

முந்தைய சூரிய ஆய்வுத் திட்டங்கள்

1960-69

6 திட்டங்கள் (5, 6ஏ, 7பி, 8சி, 9டி, இ)-நாசா

1974-1997

ஹீலியோஸ் ஏ, ஹீலியோஸ் பி (ஜொ்மனி-அமெரிக்கா)

ஐஎஸ்இஇ-3 (நாசா)

யுலிசீஸ் (இஎஸ்ஏ-நாசா)

விண்ட் (நாசா)

சோஹோ (இஎஸ்ஏ-நாசா)

ஏஸ் (நாசா)

2000 முதல் தற்போது வரை…

ஜெனிசிஸ் (நாசா)-2001

சோலாா் டெரஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் ஆய்வுக்கலன் – ஸ்டீரியோ (நாசா)-2006

பாா்க்கா் (நாசா)-2018

சோலாா் ஆா்பிட்டா் (இஎஸ்ஏ)-2020

விஇஎல்சி – சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும்.

எஸ்யுஐடி – சூரியனின் மேற்பரப்பைப் படங்கள் எடுத்து, புறஊதாக் கதிர்கள் மூலமாக ஆய்வு செய்யும்.

ஏஎஸ்பிஇஎக்ஸ், பிஏபிஏ : சூரியக் காற்று, சூரியப் புயல்களை ஆய்வு செய்யும்.

சோலெக்ஸ், ஹீலியோஸ் : சூரியனில் இருந்து வெளியேறும் எக்ஸ் கதிர்களை ஆய்வு செய்யும்.

மேக்னடோமீட்டர் : கோள்களுக்கு இடையேயான காந்தப்புலங்கள் குறித்து ஆய்வு செய்யும்.