இலங்கையில் இன்று சுட்டெரிக்கும் சூரியன்

  28 ஆம் திகதி முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.

இதனால் நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகளவில் நீர் அருந்துங்கள் 

குறிப்பாக இன்று புதன்கிழமை (30) மதியம் 12.11 மணியளவில் மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார், வவுனியா மாவட்டத்தில் இருமன்குளம், திருகோணமலை மாவட்டத்தில் கரப்புக்குத்தி, முல்லைத்தீவு மாவட்டத்தில் பழம்பாசி ஆகிய பிரதேசங்களில் சூரியனின் உச்சம் மிகவும் அதிகமாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அதிகளவில் நீர் அருந்துமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Previous articleஆழ்கடல் வெடிப்பால் கரையொதுங்கும் ஆமைகள்
Next articleமூன்று பிள்ளைகளின் தந்தை மண்வெட்டியால் தாக்கி உயிரிழப்பு!