கனடாவில் புதிய வகை கோவிட் திரிபு

கனடாவில் புதிய வகை கோவிட் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த புதிய வகை கோவிட் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பிய பொது சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பிஏ 2.86 என்னும் புதிய வகை கோவிட் திரிபு முதல் தடவையாக கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வரும் கோவிட் திரிபுகளில் ஒன்றாக இந்த கோவிட் திரிபு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நோய் தொற்று முதல் தடவையாக கனடாவில் பதிவாகியுள்ளதாகவும் இந்த திரிபின் வீரியம் மற்றும் பரவுகை தொடர்பில் தற்போதைக்கு எதிர்வு கூற முடியாது எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த கோவிட் திரிபு தொடர்பில் உன்னிப்பாக கண்காணிப்புக்கப்பட்டு வருவதாகவும், இது ஒமிக்ரோன் திரிபின் ஓர் உப திரிபு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleபெண் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பாலியல் சுரண்டல்
Next articleஆடுகளால் அந்தரங்க உறுப்பை இழந்த நபர்