இறக்குமதி தடைக்கு மத்தியில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்கள்

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர், விசேட தேவைகளுக்காக மாத்திரம் 6,900 வாகனங்களை இலங்கைக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
    
நேற்று (30) மாலை யட்டியந்தோட்டை மலல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அவற்றில் 3,000 வாகனங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கொண்டுவரப்பட்ட முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜீப் வண்டிகள் என குறிப்பிட்டார்.

எம்புலன்ஸ்கள், பொதுத் திட்டங்களுக்குத் தேவையான வாகனங்கள், தூதரகங்களுக்குத் தேவையான வாகனங்கள் போன்ற பொதுத் தேவைகளைத் தவிர வேறு எந்த வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்காலத்தில் படிப்படியாக இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

Previous articleஇலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி சிறையில்
Next articleயாழில் விபரீத முடிவெடுத்த பல்கலை மாணவி