சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் அவ்வப்போது ஏற்படும் பனிமூட்டம் காரணமாக வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன், கொழும்பு வீதி, தியகல, கடவல ஆகிய பிரதேசங்களில் அவ்வப்போது மழையுடன் கடும் பனிமூட்டம் காணப்படுவதாக பொலிஸ் நிலைய போக்குவரத்து திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பனிமூட்டம் காணப்படுவதால் அனைத்து சாரதிகளும் இவ்வீதியில் வாகனங்களை செலுத்தும் போது மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்

Previous articleரணிலுக்கு ஆதரவு வழங்கும் வடிவேல் சுரேஷ்
Next articleஇன்றைய ராசிபலன்01.08.2023