முச்சகர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது!

 நாட்டில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிகளினால் சிக்கியுள்ள மக்களுக்கு கட்டண உயர்வினை அமுல்படுத்தி மேலும் நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை என இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ஆக்டேன் 92 ரக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 13 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறு எனினும் பெற்றோல் விலை அதிகரிப்பிற்கு ஏற்ற வகையில் முச்சக்கர வண்டி கட்டணங்கள் உயர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபுதிய வாகனங்களை கொள்வனவு செய்பவர்களுக்கான செய்தி
Next articleஇலங்கை இராணுவத்திற்கு கிடைத்த அதிஷ்டம்