யாழில் கூரியர் சேவையர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் மாவட்டம் – இளவாலை பகுதிக்கு கூரியர் சேவையில் பொருட்களை வழங்க வந்த இளைஞன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கூரியர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ஒன்லைனில் பதிவு செய்யப்பட்ட பொருளை வழங்குவதற்காக நேற்றையதினம் (31-08-2023) இளவாலை பகுதிக்கு வந்துள்ளார்.

அவர் குறித்த பொருளை வழங்கிவிட்டு பணத்தினை கேட்டவேளை வீட்டினுள் அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

தாக்குதல் நடாத்தியவரை கைது செய்த பொலிஸார் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Previous articleஉழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் 15 வயது சிறுவன் பரிதாப மரணம்!
Next articleபொது மக்களை கடுமையாக எச்சரிக்கும் மத்திய வங்கி