யாழ் மாநகரசபையின் திருவிளையாடல் காட்சி !

யாழ்ப்பாண மாநகர சபையும் நாங்களும்..


யாழ்ப்பாணத்திலயும் சரி, இலங்கைலயும் சரி, விலைவாசி கூட தான். ஆனா மாநகர சபை செய்ற வேலை இருக்கே…

நல்லூர் போனா பைக் பாக் பண்ண 30/=

ஹெல்மட் ஒன்டு வைக்க 10/=

செருப்புக்கழட்ட 10/=

அதுவும் போன வருச ரிக்கட்டுக்கு ஆண்டை மாத்திப்போட்டு தருவினம். அதிலையும் 20 ரூபா குடுத்தா 10ரூபா பிறகு வரும் போது தாறதாம்… நம்புற மாதிரியா இருக்கு..

மொத்ததில கோவிலுக்க போறத்துக்கு 50 ரூபா மேலதிகமாக செலுத்தி போற கட்டத்தில வந்து நிக்கிறம். ( ஆனா கோவிலுக்க

1 ரூபா அச்சனை ரிக்கட் )

அத விட கொடுமையானது என்னன்டா யாழ்ப்பாண ரவுனுக்க பாக்கிங்கே இல்லாம ரோட் ரைட்டுல பைக்க நிப்பாட்டினாலும் 30/= ரிக்கட் ட நீட்டுறாங்கள்…


நான் நினைக்கிறன் இன்னும் 2 வருசத்தில இலங்கைல வரி கூடின மாவட்டம் யாழ்ப்பாணம் என்டு பெயர் வரும்.


யாழ்பாணக்காரனிட்ட வெளிநாட்டுக்காசு இருக்கென்டு மாநகர சபைக்கு இப்பதான் பிடிபட்டிருக்கு


Previous articleயாழில் பழ வியாபாரி கடத்தல்
Next articleஇன்றைய ராசிபலன்03.08.2023