ஹோட்டல் அறை ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

தலங்கம நெரலு உயன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (03) இரவு குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

53 வயதான மனநல மருத்துவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பொலிஸாரால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Previous articleயாழ் விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு!
Next articleஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன்