பாடசாலை மாணவர்களின் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை!

பாடசாலை மாணவர்களின் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அது தொடர்பான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 18 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி பாவனைக்கான தடைச்  சட்டத்தை கொண்டு வரத் தயார் எனவும், இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கைத்தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள்  சிறுவர்களுக்கு  பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் குழந்தைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த  மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அவர்  கூறினார்.

பல சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளினால் தமது வாழ்வை நாசமாக்கிக் கொண்டிருப்பதாகவும்,  இன்று அவர்கள்  பாடசாலைக்கு கையடக்கத் தொலைபேசியைக் கூட எடுத்துச் செல்வதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

Previous articleவாகன விபத்தில் நால்வர் காயம்!
Next articleநயினாதீவில் கடற்படையால் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட தமிழர்