யாழில் மீட்டர் வட்டிக்காரர்களால் தவறான முடிவை எடுத்த இளம் தாய்! பெரும் சோக சம்பவம்

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்காரர்களின் கொடுமை காரணமாக இளம் தாய் ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றைய தினம் (04-09-2023) இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தாயாரான யாழ் ஓட்டுமடத்தைச் சேர்ந்த 34 வயதான ஜெயராஜா அருள்பாலினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் மீட்டர் வட்டிக்கு பலரிடம் பணம் பெற்று பறவை விற்பனைத் தொழிலை செய்து வந்துள்ளதாகவும், கடனை திரும்ப செலுத்த தவறிய நிலையில் அவர்களினால் வீடு, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், வான் என்பன பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

வட்டிக்காரர்களின் கொடுமையால் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த நிலையிலும் மீட்டர் வட்டிக்காரரின் அடாவடி அதிகரித்துள்ளது.

இவ்வாறான அடாவடித்தனத்தை தன்னால் பொறுத்துக் கொள்ள இயலாது எனவும் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் கணவனிடம் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த கருத்தை பொருட்படுத்தாத கணவன் இன்று வெளியில் சென்று விட்டு பின்னர் வீட்டுக்கு வந்த போது தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி காணப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பெண் மரணம் தொடர்பில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

Previous articleஇறுதி யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி சாதனை – மன்னார் மாணவன் முதலிடம்
Next articleயாழ் மது விருந்தில் கைகலப்பு நபர் ஒருவர் உயிரிழப்பு!