மோசமான செயலில் ஈடுபட்ட 25 வயதுடைய யுவதி!

உயர் ரக கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்வதாக நடித்து அதனை செயற்படுத்தி பார்ப்பது போல் பாசாங்கு செய்து, தொலைபேசியுடன் தப்பிச்சென்ற 25 வயதுடைய யுவதியை கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் உடுகம்பளை பிரதேசத்தில் வசிப்பவர் என்றும், இவர் வெளிநாடு செல்லும் வும் கூறப்படுகின்றது.

பேஸ்புக்கில் வெளியான விளம்பரத்தின் அடிப்படையில் தொலைபேசியை கொள்வனவு செய்பவர் போன்று இவர் வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யுவதி திருடிச்சென்ற தொலைபேசியானது சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா பெறுமதியானது எனவும் அதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleவெளிநாடுகளில் சொத்துக்களை பதுகியவர்களுக்கு சிக்கல்!
Next articleபுதிய சாதனை படைத்துள்ள இந்து கல்லூரி மாணவர்கள்