திருகோணமலையில் தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட யுவதி

திருகோணமலையில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவு உட்பட்ட சேனையூர் பகுதியில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவ் யுவதி வீட்டின் அறையில் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் சேனையூர் பகுதியைச் சேர்ந்த விஜய சந்திரகுமார் திலுஜினி (வயது 22) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டேன்

யுவதி உயிரிழந்த அறையில் “அப்பா எனக்கு ஐந்து வயது இருக்கும் போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டேன்.” என்று எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அவ் இடத்திற்கு சம்பூர் பொலிஸார், மூதூர் நீதவான், சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்து சடலத்தை பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.